சோதிக்கப்படுதல் பாவமா?

சோதிக்கப்படுதல் பாவமா?
Is temptation an act of sin?

கிறிஸ்து மாதிரி..

நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.
எபிரேயர் 4:15

கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.
கலாத்தியர் 2:20

சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக. தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல.
யாக்கோபு 1:13

அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்
யாக்கோபு 1:14

பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.
யாக்கோபு 1:15

நல்லவைகள் ஆனால் அதிகமாகும் போது..

GOOD THINGS IF EXCEEDS

  1. சரீர இளைப்பாறுதல்…
    சோம்பேறித்தனம்
  2. அமைதியாயிருத்தல்..
    தொடர்பற்ற நிலை
  3. லாபம் சம்பாதித்தல்..
    பேராசை
  4. தன்னை பாதுகாத்தல்..
    தன்னலம்
  5. தகவல் பரிமாற்றம்..
    வீண் பேச்சு
  6. எச்சரிக்கை உணர்வு..
    நம்பிக்கையின்மை
  7. தாராள மனப்பான்மை..
    வீணாக்குதல்
  8. சாப்பாட்டில் ஆசை..
    பெருந்தீனி
  9. கவனமாயிருத்தல்..
    பயம்

10.சரீர ஆசை..
உணர்ச்சிக்கு அடிமை

சிந்திக்க ..

தேவனுடைய சித்தத்திற்கு அப்பாற்பட்ட அநேக நல்ல காரியங்கள் விசுவாசிகளை சோதனைக்குட்படுத் தி பாவத்திற்கு கொண்டு போயிருக்கிறது என்பதை கவனிப்போம்..

EXAMPLE..
தாவீது
சிம்சோன்

என் பிரியமான சகோதரரே, மோசம் போகாதிருங்கள்.
யாக்கோபு 1:16

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்.
யாக்கோபு 1:12

 

Comments (0)
Add Comment